"நாள்வரட்டும்; போகட்டும்; ஆனால் இந்த நலமற்ற தமிழர்மட்டும் வாழமாட்டார் தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை. சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு! "நாள்வரட்டும்" எந்தநாள்? தமிழர் வெல்லும் நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?" என்றான். தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்? தமிழர்க்கு மறமில்லை நன்று சொன்னாய் இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால் சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய் உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.