எது சரியான தமிழ்ப் புத்தாண்டு? ஏன் தமிழ்ப் புத்தாண்டு இந்த மாதத்தில் கொண்டாடப்பட வேண்டும்? தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தானா? போன்ற கேள்விகளை அடிக்கடி நாம் எதிர்கொள்கிறோம்.
இத்தகைய கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டுமென்றால் அதற்கு நமக்கு அறிவியல் அடிப்படை தேவை. இந்த நூல் அப்பணியைச் செய்கிறது; அறிவியல் அடிப்படையில் காலக்கணக்கையும் நாள்காட்டி அமைப்பையும் விரிவாகவும் தெளிவாகவும் கட்டுரைகளின் வழியாக வாசிப்போருக்கு விளக்குகின்றது. நாட்காட்டிகளைப் பற்றிய விளக்கங்கள் அறிவியல் பூர்வமான பின்னனியுடன் எலிய தமிழிங் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் ஆழமான தமிழ் இலக்கியப் புலமை இந்த நூல் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்விற்கு வலு சேர்க்கிறது.
எது தமிழ்ப் புத்தாண்டு என்று பட்டிமன்றம் வைத்து விவாதிப்பது இந்த நூலின் நோக்கமல்ல.மாறாக,மிக நீண்ட காலமாக நிலவிய குழப்பங்களுக்குத் தெளிவுடன் விடை காணும் முயற்சியாகவே இந்த நூல் திகழ்கிறது.
தமிழ் மொழி ஆர்வலரான அமெரிக்கா வாழ் முனைவர் ஜோதி எஸ். தேமொழி பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று. திட்ட ஆய்வளராகப் பணி புரிந்தவர். தற்பொழுது ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் இதழாளராகவும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பல்வேறு இணைய இதழ்களில் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுழைகள் எழுதி வரும் தேமொழி, தமிழ் இலக்கியம், பெரியாரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். தற்பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் ஆகவும், மரபு அறக்கட்டளையின் 'நிணை' இதழின் பொறுப்பாசிரியர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான இவரது 'இலக்கிய நீளாய்வு நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Be the first to rate this book.