தமிழர்களுக்கு விடுதலை தேடித் தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர். தமிழைப் பற்றியும், உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தரக் குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று; தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ்நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம். உண்மைத் தமிழர்களுக்கு எள்ளளவும் மகிழ்ச்சி ஊட்டாது மாறாக வெறுப்பையே ஊட்டும் என்று அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கருதிக் கொள்வார்களாக.
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
எவரொருவர் தேசிய இனங்கள். மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடவில்லையோ, எல்லா தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையையும் எதிர்த்துப் போராடவில்லையோ அவர் ஒரு மார்க்சியவாதியே அல்ல; அவர் ஒரு சனநாயகவாதியே அல்ல. அதில் சந்தேகமில்லை.
-வி.இ.இலெனின்.
Be the first to rate this book.