இரா.பி.சேதுப்பிள்ளை (2 மார்ச்சு 1896 25 ஏப்ரல் 1961) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளரும், வழக்குரைஞரும். மேடைப்பேச்சாளரும் ஆவார். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும். செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற நூலுக்கு 1955 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
"தமிழின்பம்"என்றால். இதை இன்பத்துள் இன்பம் என்று சொல் லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும். பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். புறநானூறு. சிலப்பதிகாரம். கந்தபுராணம். திருக்குறள். கம்பராமாயணம். பெரியபுராணம் முதலிய பழைய நூல்களின் சுவை இக்கட்டுரைகளில் துளும்புகின்றன. கண்ணகி கூத்து, சேரனும் கீரனும், அறிவும் திருவும், தமிழும் சைவமும், ஆண்மையும் அருளும், கர்ணனும் கும்பகர்ணனும். காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய கட்டுரைகள், படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கின்றன.
Be the first to rate this book.