ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தமிழின் தலைச் சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தலைசிறந்த பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். கபிலர் அகவலை செவ்விய முறையில் பதிப்பித்து, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து,ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள தமிழ் இலக்கியம் தற்காலம் என்கிற இந்நூல், அவர் எழுதி 'தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி', 'தற்காலத் தமிழ் இலக்கியம்' ஆகிய இரண்டு நூல்களின் முன்னோடி, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப் பரப்பையும் அச்சொட்டாக எடுத்து க்காட்டும் நூல், விமர்சன நோக்குடன் தமிழ் இலக்கியப் பரப்பை அறிந்துகொள்ள விரும்பும் எவரொருவரும் ஆழ்ந்து பயில வேண்டிய நூல்.
Be the first to rate this book.