யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றிய பழம்பெரும் சான்றோர்கள் சிலருள்ளும் தனித்தன்மையும் பெருமையும் கொண்டவர்.
அவர் தமிழ் இலக்கணத்திற்குப் புரிந்துள்ள தொண்டு மறத்தற்கு அறிது; மகத்தானது. அவர், 'இலக்கணச் சுருக்கம்' என்னும் தலைப்பில் கி.பி. 1886ஆம் ஆண்டில் யாத்து வெளியிட்ட நூலையே, 'தமிழ் இலக்கணம்' என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியுறுகிறோம்.
தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் இவ் இலக்கண நூல் அனைவர்க்கும் மிக்க பயன் தரவல்லது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நூலை வாங்கிப் பெரும் பயன் எய்தலாம்.
இந்நூற் சிறப்பையும் பயனையும் அறிந்து நம் தமிழுலகம் வாங்கிப் பயனடையும் என நம்புகிறோம்.
Be the first to rate this book.