இத்தொகுப்பிலுள்ள முதல் பேட்டியின் இறுதியில், 'போதுமா... இன்னும் அசிங்கமான பதில் வேணுமா?” என்று புதைந்து சிடந்த குமுறலை வெளிப்படுத்துகிறார். நடிகர் திலகம் சிவாஜி சுணேசன்.
நான் வாங்கிய விருதுகளெல்லாம் எனக்கு போனஸ் போலத் தான்... சிவாஜி பாராட்டுதான் சம்பளம்" என்று பிரகடனம் செய்கிறார் கமல் ஹாசன். 'தேசியகீதம்" இறைவனின் கட்டளை என்கிறார் இயக்குநர் சேரன் அவரது திறமையை வெளிநாட்டுக்காரர்கள் உணர்ந்த அளவுக்கு இங்கு உணரப்பட்டதாகத் தெரிய வில்லை.." என 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் இசை ஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா இளையராஜா.
பெருங்கனவுகளுடன் தமிழ் சினிமாவில் இன்று முன்நகர்ந்து வரும் எண்ணற்ற துணை, இணை இயக்குநர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய தொகுப்பு இது. நேற்று இல்லாமல் இன்றும் நாளையும் இல்லை. நேற்றின் சுவடுகள் பற்றிய பரிச்சயம் இன்றும் நாளையும் உங்கள் வெற்றிநடையை உறுதிசெய்வது நிச்சயம்.
Be the first to rate this book.