ஆராய்ச்சியும் திறனாய்வும் ஒன்றுநாளே? என்பது நம்முடைய மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயமாகும். திறனாய்வைவிட வளர்ச்சி பெற்ற பார்வையே ஆராய்ச்சியாகும். ஆராய்ச்சியாளனுக்கு அவன் தேர்ந்தெடுத்த ஒரு நோக்குநிலை உண்டு. அவன் மெய்ம்மைகளை மட்டுமே தேடுகிறவன். நோக்கு நிலைக்குப் பின்னர் அவனுக்கு விருப்பங்கள் (அபிப்பிராயங்கள்) என ஏதும் இல்லை.
ஒருவன் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கொள்கையின் வழியாக ஒரு முடிவுக்கு வருவதற்கும் தன் விருப்பத்திற்கேற்ற முடிவுக்கு வருவதற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சியாளன் தான் தேடிக் கண்ட மெய்மமைகளைத் தன்னுடைய நோக்கு நிலையில் நின்று ஆராய்ந்து தன் கண்டுபிடிப்புகளை வெளியீடுகின்றான் என்பதே ஆராய்ச்சியின் இலக்கணமாகும்.
-தொ.பரமசிவன்
Be the first to rate this book.