மனிதன் சமூக விலங்கு என்ற பெரும் உண்மைக்கு மாறாக அனைத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்த நாட்களில் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த போது மனைவியாலேயே நிராகரிக்கப்பட்ட கணவர்கள். கூலி வேலையும் இல்லாமல் போன நிலையில் குழந்தைகளின் பசியை ஆற்ற செய்வதறியாது தவித்துப்போன தாய்மார்கள். நின்று போன திருமணங்கள், சந்திக்க முடியாத காதல்கள் மற்றும் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று மரண பயம், இவற்றோடு வாழ்ந்த காலத்தை வரலாற்றில் திரும்பிப் பார்க்கும்போது தலேஜூவும் அதில் சில கனங்களைப் பிடித்து வைத்திருப்பாள். ஓர் ஆண் தன் வாழ்வில் கடந்து வந்த பெண்களை அவனது உள் அமைதிக்குள் இருந்து மீட்டெடுத்துக் கதாப்பாத்திரங்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் அவனது வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள், அலைச்சல்களை மொழியின் வசீகரத்தோடு சொல்வது இந்த நாவலின் தனிச்சிறப்பு. தலேஜூ என்பவள் நேபாளத்தின் மன்னர் காலத்துப் பெண் தெய்வம். மலாயாவிற்கு வேலைக்கு வரும் பெண் ஒருத்தியின் மூலம் நாவலுக்குள் பிரவேசிக்கிறாள் பின்னர் அவளே குறியீட்டுத் தெய்வமாக விஸ்த்தாரமெடுக்கிறாள்.
-அம்பிகா
Be the first to rate this book.