ஒரு குறிப்பிட்ட அறிஞரின் ஆராய்ச்சிப்பரப்பினை இத்தொகுப்புகளின் வழி முழுமையாக அறியவியலும்.
தமிழியல் ஆய்வுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெற்ற முன்னேற்றங்களையும் ஒளியூட்டப்பெற்ற தலங்களையும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளையும் இதன்வழியறியலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வகை ஆராய்ச்சிகளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டன என்பதை அறிவதற்கும் தேவையானதாகின்றது.
காலத்திற்குக்காலம் மாற்றங்களைப் பெற்றுவரும் தமிழியல் ஆய்வுகளின் அணுகுமுறைகளையும், மொழிநடை வளர்ச்சி யினையும் அறிதலுக்கும் இவ்வாய்வுகள் இன்றியமையாதன வாகின்றன.
என்பனவாக பலவேறு காரணங்களை இத்தொகுப்புப் பணியின் இன்றியமையாமைக் கருதிக் கூறிச்செல்லலாம். செந்தமிழில் விபுலானந்த அடிகளார் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவாம். இயல், குறுநாடகம் தமிழியலின் மும்மைகளைச் சார்த்தவைகளாம். என்னும் இவர் தொடக்க காலத்தில் மயில்வாகனம் என்னும் தனது இயற்பெயரில் கட்டுரைகளை எழுதினார். பின்னர் விபுலானந்த அடிகளார் என்னும் தனது துறவுப் பெயரில் எழுதலானார். இவரது கட்டுரைகள் பல்வேறு பெயர்களில் சிறு நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் இருபதுக்கு மேற்பட்ட இதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதிய நிலையில் இன்றுவரை அவற்றை முழுமையாக வெளியிடுவதில் அவற்றின் கிட்டா அருமை இடையூறாக உள்ளன. ஆதலால் இசையினுக்கு முதன்மை கொடுத்துச் செந்தமிழ் இதழில் வெளிவந்த கட்டுரைகள்
மாத்திரம் தொகுக்கப்பட்டு 2009 ஆண்டு வெளிவந்தது. இதன்பின் இலங்கை இந்துசமயத்தின் காலத்தில் ஒரு பெரும் தொகுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும் அத்தொகுப்பும் முழுமையானதாக அடிகளாரின் இல்லை. இனிவருங்காலத்தில் தொகுப்புகள் முழுமையாக வெளிவருவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளேன்.
Be the first to rate this book.