தமிழியல் ஆய்வுத்துறைகளான இசை, நாடகம், ஓவியம், இலக்கியம், இலக்கணம், வரலாறு முதலான யாவற்றிலும் திறன் வாய்க்கப்பெற்றோர் மிகச் சிலரே. அவர்களுள் தலையானவர் விபுலானந்த அடிகள். திருவேங்கடம் முதல் அம்பாறை வரையிலான தமிழரின் மரபுவழிப்பட்ட தாயகத்திலுள்ள அனைத்து அறிஞர் பெருமக்களினாலும் என்றும் போற்றப்படக்கூடிய பெரும் பேறுடைய பெருமகனார். அவர் தமிழிசை உலகினிற்கு யாழ் நூலினை வழக்குதற்கு முன்னமே முத்தமிழின் வளத்தினை வெளிப்படுத்தும் அறிய செய்திகளைக் கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றை 'செந்தமிழ்' போன்ற ஆராய்ச்சி இதழ்களில் எழுதி வரலாயினார். அவற்றில் பெரும்பாலானவை இசை இலக்கணம் தொடர்பானவைகளாகும் தமிழிசையின் அறியவியலாத முடிச்சுகளை இனங்கண்டு அவற்றினை விளங்கிக் கொள்ளுதலுக்கு அக்கட்டுரைகள் பேருதவியாக விளங்கக்கூடியன. இத்தொகுப்பில் இசைத்தமிழ் தொடர்பான கட்டுரைகள் ஒன்றான வரிசை முறையிலும் மற்றைய கட்டுரைகள் பிறிதொன்றான வரிசை முறையிலும் வகைமை செய்யப்பட்டுள்ளன. யாழ்நூல் போன்றவற்றினை நோக்குதற்கு, முன் அடிகளாரின் இக்கட்டுரைகளை ஆய்ந்து தெளிதல் என்பது சிறப்பினுக்குரியதாகின்றது.
Be the first to rate this book.