ஒருவர் அடையும் அவமானங்களும் உதாசீனங்களுமே கலையின் வீர்யமாகிறது. இதில் பெண்களின் படைப்புலகம் ஆண்களின் கற்பனைக்கெட்டாதது. சம உரிமை கேட்கும் இடத்தைத் தாண்டி, தாங்கள் உணரும் எதிர்த்தரப்பின் அசிங்கங்களையும் ஆபாசங்களையும் பெண்கள் எழுதுவார்கள். அது ஆண்களை இன்னும் பதறச் செய்யும். சாந்தி சண்முகம் என்னும் இந்தப் புதிய எழுத்தாளரிடம் அதற்கான சில கூறுகளைக் காண்கிறேன்.
கழிவறைக்காடுகளில்கூட சாதியப் பிரிவினைகளைக் கொண்டிருக்கும் ஊரில் கழிவறைக்கு ஏங்கும் பெண் முதல். அயலகம்வாழ் பெண்கள்வரை. அதீதப்படுத்தப்படாத பெண்வலி இந்தக் கதைகளில் நிரம்பியிருக்கிறது.
-கவிதா பாரதி
எழுத்தாளர், இயக்குநர். திரைக் கலைஞர்
Be the first to rate this book.