இதுசம்பிரதாயமான நேர்காணல் இல்லை. பின்நோக்குப் பார்வையில் தொடங்கி தற்காலம் வரை விரியும் என்வாழ்க்கைச் சுருக்கத்தின் திரைக்கதை. அப்படித்தான் இதைச் சொல்ல வேண்டும். படித்துப் பார்க்கும்போது, தருமபுரியில் என் பால்ய காலம்தொடங்கி, அம்ருதா பதிப்பக அலுவலகத்தில் நான் என் அறையில்அமர்ந்திருக்கும் இந்தக் கணம் வரை நடந்தநிகழ்வுகளெல்லாம் என் மனத்திரையில் வந்துவந்து போயின. 'தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி' என்பதுதான்என்னைக் குறித்து பொதுவெளியில் தெரியும் பிம்பம். ஒரு காவல் அதிகாரியாக, பணிக்காலத்தில் நான் ஆற்றிய பணிகளில்சிலவற்றை இந்த நேர்காணல் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
-திலகவதி
Be the first to rate this book.