அமெரிக்காவில் நிலவும் இனவாதம், நிறவெறி, வர்க்கப் போராட்டங்களை மிகத் துணிச்சலாகத் தன்னுடைய திரைப்படங்களில் பதிவுசெய்து வருபவர் ஆப்ரிக்க-அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான ஸ்பைக் லீ (Spike Lee). அவரது திரைவெளியின் அரசியல் குரல், அதைக் காட்சிப்படுத்தும் தனித்துவமான பாணி, குறிப்பாகக் கதாபாத்திரங்கள் கேமராவை நோக்கி நேரடியாகப் பேசும் உத்தி, புகழ்பெற்ற 'டபுள் டாலி ஷாட்' (Double Dolly Shot) என இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் சொர்ணவேல் ஆழமும் விரிவும் எளிமையும் கூடிய
10 கட்டுரைகளில் விவரித்திருக்கிறார்.
இக்கட்டுரைகளை வாசிக்கும்போது ஆப்ரிக்க அமெரிக்கர்களின் பண்பாடு, நகர்ப்புற வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் அன்றாடச் சவால்களைத் திரையில் அவர் எவ்வளவு யதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் சித்தரிப்பவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழில் தலித் சினிமா உறுதியுடன் நிலைபெற்றுள்ள காலத்தில், ஆசிரியர், பதிப்பகம் ஆகிய இரு தரப்பால் இந்த நூல் மேலும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.
Be the first to rate this book.