உலகமெங்கும் நவீன எழுத்தாளர்களின் எழுத்து தன்னை யதார்த்தத்தின் எதிர்பிம்பமாக, ஒரு வகையில் யதார்த்தத்தின் உருவை மாற்றி கனவுநிலை, சாயை என விநோதமாக ஆக்கிவிடுகிறது. அதன்படி எழுத்தாளனின் இயங்கும் விரலும் வாசகனின் கண் நகர்வுமே. இலக்கியம், எப்போதும் தனிமையின் ஊற்றை நோக்கி எதிரெதிர்த்திசைகளில் நகர்பவர்களே வாசகர்கள், எழுத்தாளர்கள்.
இந்தத் தொகுப்பு மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளையும், தமிழ்க் கதைகளையும் புனைவு என்ற அடிப்படையிலே சந்திக்க வைக்கிறது. இந்தப் புனைவில் அழிந்த, புத்துருவாக்கம் கொள்கிற உருக்கள். இடங்கள், மனிதர்கள் பற்றிய விபரங்கள் மாறுகொள்கின்ற போதும் புனைவு தன் சுய தீவிரத்தால் எல்லாவற்றையும் மீறி தன் ரகசியத்தின் மூலம் யதார்த்தத்தை உடைக்கிறது. அவ்வகையில் காஃப்காவின் எழுத்துக்கள், சம்பவங்களை எந்தவிதப்பிடிப்பும் அற்ற வெற்றுவெளிக்கு எடுத்துச் சென்று சிதைப்பதும், போர்ஹே தன் சுழலும் விளையாட்டின் தீவிரத்தை எழுத்தாக்கியதும் நவீனம். தமிழில் அதை நோக்கிய எத்தனிப்பை, அல்லது சக்புனைவை மேற்கொள்கிற நிலையையே இந்தக் கதைகள் மேற்கொண்டிருக்கின்றன. வெளி உலகின் தோற்றங்களை, கதைகள் வெகு எளிதாக அழிக்கின்றன என்பதையே எல்லாக் கதைகளும் காட்டுகின்றன. கதை தன் இயல்பில் அதுவே. அவ்வகையில் இது வாசகனின் முன் வைக்கப்பட்ட புனைவு வரிகள் என்பதன்றி வேறில்லை.
Be the first to rate this book.