சேர, சோழ, பாண்டியர் எனும் முப்பெரும் வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையுடையது கும் நாடு. இம்மன்னர்கள் தாம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் சிலவற்றை இம்மண்ணில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில், வானோங்கி உயர்ந்து நின்று அனைவரையும் பிரமிக்கச் செய்யும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிச் சென்ற இராஜராஜசோழன் குறிப்பிடத்தக்கவர்.
இவரது ஆட்சிக் காலத்தில் இராஜராஜ சோழருக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு அதிகாரிகளுள் 'சோனகன் சாவூர் பரஞ்சோதி" என்பவரும் ஒருவர். இவரது பெயர் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளிலும் இராஜேந்திரன் காலத்துச் செப்பேடுகளிலும் காணப்படுகிறது.
சோனகனான இவன் எவ்வாறு சோழருக்கு உதவியாக இருந்தான்? சோழ தேசத்தில் இவனது பணி என்ன? இவற்றை எல்லாம் இராஜராக சோழன் கதையோடு பயணித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த வரலாற்று நூவல் உருவாக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.