நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெரும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது, நினைவேக்கத்தை மொழியில் வரையும்போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் நிலைகுத்தி நிற்கும் விரிசிறகு பட்சியெனவும், உணர்வுச்சத்தை தளர்த்துகையில் ஒரு பாராசூட் தரையிறங்குவது போன்று ஒரு நடை நர்சிம்மிற்கு வாய்த்திருக்கிறது. இதுவரைக்குமான பிரதேச அழகியல் மின்னும் நிலப்பரப்பிலிருந்து உன்னி இந்தக் கதைகள் பிறிதொரு உளவியல் வெளியில் சஞ்சாரம் செய்வதை ஒரு தொடர்வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு கணத்தையும் உற்று நோக்கல், துல்லிதமான விவரணைகள் வழி நம்பகத்தை உருவாக்குதல், மனோரதங்ககளை பிசகாமல் வார்த்தைப்பாடு செய்தல் போன்றவை இக்கதைகளின் பலம் என்று தோன்றுகிறது.
Be the first to rate this book.