சொல்லேர் எனும் அகராதியியல் ஆய்வு மேலும் ஒரு புதிய வெளிச்சத் தடத்தை உருவாக்கியிருக்கிறது. நாம் எல்லோரும் பயன்படுத்திய சொற்கள் என்றாலும் அவற்றைப் பயன்படுத்தும் சூழலை நாம் உணர்ந்திருந்தாலும் அவற்றின் பொருள் குறித்த தெளிவு நம்மிடை இல்லை என்பதை இந்த நூல் நமக்குத் தெளிவுறுத்துகிறது. ஒவ்வொரு சொல்லினையும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் நிகழ்வினூடாக ஒப்பிட்டுரைப்பதும் இந்த நூலின் நோக்கமும் பரிமாணமும் தமிழுக்குப் புதிய தடத்தினை அழுத்தமுறப் பதிக்கிறது.
இயற்பெயர் க.இராஜமாணிக்கம் கந்தர்வகோட்டை வட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதை, புதினம். கட்டுரை. மாவட்ட வரலாறு சொல்லாய்வு என்று பல்துறைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துவருகிறார். இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள் வந்து புதினங்கள் மூன்று குறும்புதினங்கள் உட்பட இருபந்து ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். இவரது பிராண நிறக் கனவு எனும் சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை விருதும் அன்னமழகி எனும் நாவல் எழுத்து-திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு வழங்கும் ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசும் பெற்றன. மேலும் இவர் பல இலக்கிய அமைப்புகளால் விருதும் பரிசும் பெற்றவர்.
புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு தொடர் நூல்கள் கெயண்டு வருகிறார். புதுக்கோட்டை பன்றி நாடு முதல் புதுகை வரை (பாகம்-1) எனும் மாவட்ட வரலாறு நூலைத் தொடர்ந்து புதுகை வட்டார சொல்லகராதி எனும் நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளிவந்தது அண்டனூர் சுரா சிறுகதைகள் 100' எனும் க்கு தொகுப்புகள் 2004 முதல் 2024 வரையிலான சிறுகதைகளின் தொகுப்பாகம்
Be the first to rate this book.