தமிழக அரசியல் சூழலில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என அரசியல் வர்க்கம் முழுவதும் வட்டம் முதல் மாநிலம் வரை கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை ரியல் எஸ்டேட் முதலாளிகள் கல்வி முதலாளிகள் மருத்துவ முதலாளிகள் சாராய முதலாளிகள் ஊடக முதலாளிகள் உற்பத்தி முதலாளிகள் சினிமா முதலாளிகள் தரகு முதலாளிகள் என நிரம்பிய நிலையில் மூச்சுக்கு மூன்று முறை திராவிட மாடல் என மார் தட்டுகிறார்கள்.
சோசலிச மாடலின் சொந்தங்கள் சில தற்காலிக தேர்தல் ஆதாயங்களுக்காக திராவிட மாடல் முன் தலை சொறிந்து நிற்கிறார்கள்.
சோசலிச மாடல் தான் ஒரே மாடல் வரலாற்றில் நிற்கும் மாடல் மற்ற அனைத்தும் மறையும் மாடல்கள் எனபதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிறுவுகிறது.
டிரம்பிஸ்ட்கள் எலான் மாஸ்க் களின் பொய்களைத் தூளாக்குகிறது. சோசலிஸ்ட் மாடலின் சொந்தங்கள் உறுதியுடன், பெருமையுடன் தலை நிமிர்ந்து முன் வைக்க வரலாற்று தகவல்கள் மறுக்க முடியாத ஆதாரங்கள் இந்த நூலில் நிரம்ப இருக்கின்றன.
Be the first to rate this book.