பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான தேனம்மை லெஷ்மணனின் இக்கதைகள் அனைத்து பெண் மனங்களின் வழியாக வெளிப்படும் அவர்களின் ஆற்றாமையையும், அன்பையுமே களமாகக் கொண்டுள்ளன. மிக எதார்த்தமான இக்கதைக் களங்களின் வழியாக தான்சார்ந்த பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கும் அதே நேரத்தில்,இவ்வாழ்க்கையின் அர்த்தமிழந்துபோன அன்றாட நிகழ்வுகள் சில எப்படி பெண்களின் பார்வையில் வேறோரு கோணத்தில் அதே துடிப்புடன் உயிர் பெற்றுவிடுகிறது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக கதைகள் நெடுக பதிவாகியுள்ளன.
கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்திரிகையாளர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம், விடுதலை வேந்தர்கள், பெண் மொழி, காதல் வனம், மஞ்சளும் குங்குமமும், பெண் அறம், கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், பெண்ணின் மரபு, நன்னெறிக் கதைகள் இரண்டு தொகுதிகள், வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம், நீலகேசி, ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கதைகள், சாணக்ய நீதி, சோகி சிவா ஆகிய 24 நூல்களின் ஆசிரியர். அமேஸானில் இவருடைய 57 நூல்கள் வெளியாகி உள்ளன.
இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அன்ன பட்சி நூலுக்காக 'அரிமா சக்தி' விருது பெற்றவர். சோகி சிவா நாவலுக்காகக் கம்பம் இலக்கியப் பேரவையின் பரிசு வென்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறையும் சிறுகதைப் போட்டியில் ஒரு முறையும் பரிசு பெற்றவர். இவை தவிர 25-க்கும் அதிக விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர்.
Be the first to rate this book.