மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் ‘சிற்றன்னை’ நாவல் வெற்றிப் பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நியாசி அவர். அவரது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்து கொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டு விடுகிறார். சட்டெனத் தன்னிலை உணர்ந்து விலகிச் சென்று விடுகிறார். ஆனால் சுந்தரவடிவேலும் நாமும் விலக முடியாமல் அதில் உழன்று வருகிறோம். இந்த நம் வேதனைக் கதையைத் தான் புதுமைப்பித்தன் இதில் சொல்லியிருக்கிறார்.
-மண்குதிரை
Be the first to rate this book.