அன்பை வெறும் மனித ஆர்வமாக இல்லாமல் தெய்வீக காதலாக மாற்றியவர் ஜலால் அல்-தின் ரூமி. மனித இருப்பு, இறப்பு, பிரபஞ்சம் தொடர்பாக ஆழமான கேள்விகளை ஆராய்ந்து, சந்தேகம் மற்றும் தத்துவ விசாரணையைக் கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் உமர் கயாம். இவர்களது தொடர்ச்சிதான் நோவா லைஸ். நாம் யார்? நமது உலகத்தை , நம்மை, எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? என்பதை ஒவ்வொரு கவியும் தீவிரமாக தம்மை நோக்கி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். நோவா லைஸும் அவ்வாறு கேட்டுக் கொள்கிறார். கவிதை ஒரு சொற்பொழிவு இல்லை. நோவா லைஸ் கவிதைகள் முற்றிலும் தமிழுக்குப் புதியவை. அவை வாசிப்போரிடம் உணர்ச்சி பூர்வமான தருணங்களை உருவாக்குபவை.
Be the first to rate this book.