சிறப்புச் சார்பியல் கொள்கையும் பொதுச் சார்பியல் கொள்கையும் -ஆல்பர்ட் ஐன்ஸ்டனை
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலில், குறிப்பாக இயற்பியலில் ஒரு புரட்சி நிகழ்ந்தது. ஆம் 1905-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் வமேதை 'சார்பியல் கொள்கையை வெளியிட்டார். பலருக்குப் புரியவில்லை. பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர் பிழை என்றனர். இன்னும் சிலர் ஏற்பதா வேண்டாமா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அதுவரையில், 'சரியானவை' என ஒப்புக் கொள்ளப்பட்ட பல முக்கியமான இயற்பியல் கோட்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்கினார் ஐன்ஸ்டைன் அன்றுவரை இயற்பியலில் கோலோச்சி வந்த பல கோட்பாடுகள் ஆட்டம் கண்டன. குறிப்பாக, பேரண்டத்தில் (Universe) தமக்கெல்லாம் எளிதாகப் புரிந்தவை என்று நாம் நம்பிக் கொண்டிருந்த பெருவெளி (Space) காலம் (Time) பற்றிய புதிய விளக்கங்களை ஐன்ஸ்டைன் அளித்தார். அவைகுறித்து நியூட்டன் கொடுத்த வரையறுப்புகள் தெளிவற்றவை என்பதை எடுத்துரைத்தார். அவை அறிவியலற்ற முறையில் மனிதனின் பொதுப்புத்தியில் உருவானவை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
பேரண்டத்திலிருந்து அனைத்துப் பொருட்களும் மறைந்துவிட்டால் பெருவெளியும் காலமும் தொடர்ந்து இருக்கும் நம்பப்பட்டது. இப்போதும் பலராலும் நம்பப்படுகிறது. ஆனால், பொருளுடன் சேர்ந்து பெருவெளியும் காலமும் மறைந்துபோகும் என்பதே ஐன்ஸ்டைன் முன்வைத்த சார்பியல் கொள்கை இது இடம்,காலம், பொருள், ஆற்றல், ஈர்ப்பு பற்றிய நமது புரிதலை மாற்றியது. மேலும், அண்டவியல், வானியற்பியல், குவாண்டம் இயற்பியலுக்குப் புதிய எல்லைகளைத் திறந்தது. சார்பியல் கொள்கை இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
சிறப்புச் சார்பியல் கொள்கையை ஐன்ஸ்டைன் 1905-இல் முன்வைத்தார். பத்தாண்டு காலம் ஆழமான ஆய்வுகளுக்குப்பின், 1915-ஆம் ஆண்டில் பொதுச் சார்பியல் கொள்கையை உருவாக்கி, 1910-ஆம் ஆண்டில் அதனை வெளியிட்டார். தமது சிறப்பு, பொதுச் சார்பியல் கொள்கைகளை அதே ஆண்டில் ஜெர்மன் மொழியில் நூலாக வெளியிட்டார். சிறப்புச் சார்பியல் கொள்கையும் பொதும் சார்பியல் கொள்கையும் (Relativity: The Special and the General Theory) என்னும் அவருடைய நூல் கடந்த நூற்றாண்டில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஐன்ஸ்டைன் தம் நூலை வெளியிட்டு இவ்வளவு காலம் (107 ஆண்டுகள் ஆன பின்னும், அந்நூல் தமிழ்மொழியில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது நாமெல்லாய் வெட்கப்படத்தக்க குறைபாடாகும். இக்குறைபாட்டைப் போக்கும்வகையில், திரு பாருமான் அவர்கள் ஐன்ஸ்டைனின் அரிய நூலை எளிய, இனிய தமிழில் மொழிபெயர்த்து தமக்கு வழங்கியுள்ளார்.
நீங்கள் ஒரு ஆசிரியராய், விஞ்ஞானியாய், ஆர்வமுள்ள ஒரு வா எவராய் இருந்தாலும், சார்பியல் பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருக்கும். இந்த நூலைப் படித்துப் புரிந்து கொள்ள உங்களுக்கு இயற்பியலில் எந்த முன்னறியும் தேவையில்லை. உங்களுக்குத் திறந்த மனமும் வியப்புணர்வும் மட்டும் இருந்தால் போதும் ஐன்ஸ்டைனின் மூல நூல் தரும் அதே உணர்வினைச் சற்றும் குறையாத அளவில் ரகுமானின் தமிழாக்க நூலும் தருகிறது என்பதைச் சிறிதும் ஐயமின்றிச் சொல்ல முடியும் வாருங்கள் வாசித்து மகிழுங்கள்!
Be the first to rate this book.