'உங்கள் விதியின் நாயகன் நீங்களே. உங்கள் சூழலை நீங்கள் பாதிக்க முடியும், வழிநடத்த முடியும், கட்டுப்படுத்த முடியும். உங்கள் வாழ்க்கையை விரும்பியவாறு மாற்றிக்கொள்ள முடியும்.'
இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான திங்க் அண்டு க்ரோ ரிச். அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றிப் புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம், ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும். சுயஉதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும். ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும்.
ஜான் சி மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள 'வாழ்நாளில் படித்தே தீரவேண்டிய புத்தகங்களின் பட்டியலில்' திங்க அண்டு க்ரோ ரிச் இடம் பெற்றுள்ளது. 'பிஸினஸ் வீக்' இதழ் வெளியிடும் சிறந்த புத்தகங்களின் பட்டியலில், வெளியிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் அதிக விற்பனையாகும் ஆறாவது சிறந்த புத்தகமாக இது விளங்குகிறது.
நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
Be the first to rate this book.