லா.ச.ரா. என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.
மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கட்டங்கள் பற்றிப் பணிவுடன், அழுத்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். புரிந்தது. புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது. அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது. இன்றைக்குப் புரியாவிட்டால், நாளைக்குப் புரிகிறது.
அட கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்து விட்டுப் போகட்டுமே! எல்லாமே புரிந்துவிடும், புரிந்தாகணும் என்று எதிர்பார்ப்பது முறை அன்று விஷயம் அதனதன் உருவில், ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது.
- லா.ச.ராமாமிருதம்
Be the first to rate this book.