காக்கிச் சட்டைக்குள் கவிதை உள்ளம் கொண்டிருக்கும் தம்பி அகரம் சுந்தரம், மனித நேயமும் தமிழ்ப்பற்றும், சமுதாய அக்கறையும் கொண்ட சிறந்த கவிஞர்.
இன்று கல்வியால் அறிவாற்றலால், முயற்சியால் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் கடல் கடந்து அயல்நாடுகளில் உழைக்கும் தமிழ்ச் சிங்கப் பெண்களைப் பாடும் போதும்..
“தேடும் யாவும் கிடைப்பதும் இல்லை! வாடி நின்றிட பலனேதும் இல்லை! ஓடியும் தேடியும் கண்டிட வேண்டும்.."
என்று வாழ்க்கையை புரிந்து கொண்டு முழங்கிடும் போதும்..
"வசதி கொண்டவன் ஆயிரம் பார்ப்பான்! வசதி இல்லாதவன் எதைப் பார்ப்பான்? வாஸ்துவை நம்பி வாழ்ந்திடாமல் மனத்தில் நிம்மதி கொண்டு வாழ்வீர்!"
என்று மூடநம்பிக்கையின் முகத்திரையைக் கிழிக்கும் போதும்.. இவரது கவியாற்றல் உச்சம் தொடுகிறது.
அகரம் சுந்தரம் படைத்திருக்கும் 'சிங்கப்பெண்' கவிதைத் தொகுப்பு நிச்சயம் பலராலும் பாராட்டப்படும் என்பதை இவரது கவிதைத் தொகுப்புகள் பலவற்றை மேற்பார்வை இட்டவன் என்ற முறையில் வாழ்த்தி மகிழ்ந்து உறுதியுடன் சொல்வேன்.
- கருமலைப்பழம் நீ
Be the first to rate this book.