வாசக மனதை ரொம்ப தூரத்துக்கு. ரொம்ப நேரத்துக்கு அலப்பரை பண்ணும் கதைகள் களந்தை பீர்முகம்மதுவின் சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும், அவர் படைத்துத் தந்த கதைகள், சாதாரணமாய் நம் கையில் ஏந்தித் தூக்கிப் போட்டுவிட முடியாதவை; கனமானவை. அவற்றை சாதாரண வாசிப் புக்குப் பலிகொடுத்துவிட முடியாது.
-பா.செயப்பிரகாசம்
இசுலாமியச் சமூக வாழ்வியலைத் தனித்த அடையாளங்களைக் கொண்ட தாகப் பார்க்கும் பார்வையை களந்தை பீர்முகம்மதுவின் கதைகள் வலிமையாய் மறுக்கின்றன. சமயம் சார்ந்த சில நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் தவிர்த்துப் பார்த்தோமானால் சராசரி மத்தியத்தரத் தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் துயரங் களையும் நாம் இசுலாமியக் குடும்பங் களிலும் தரிசிக்கலாம். களந்தை பீர் முகம்மது அவற்றை ஒரு சாளரமாகத் தந்துகொண்டிருக்கிறார்.
-இரா. கோமதி சங்கர்
Be the first to rate this book.