கண்டவையும் கற்பனையும் நிலா மகன் எழுத்தில் நிஜ உருவமாகி நிற்கின்றன. நிலா மகன் எழுத்து என்று சொன்னதற்குக் காரணம், நடையின் சரளம். சொல்ல வந்ததைத் தெளிவாக நம் முன் வைக்கும் நடை. அதீதச் சொல்லலங்காரங்களும் இல்லை; சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதால் குழப்பத்துக்குக் கொண்டுபோவதும் இல்லை. ஆற்றொழுக்காகப் போகிறது இவரது எழுத்து முறை. புனைவைக் கையாண்டு உண்மைகளைச் சித்திரித்திருக்கிறார் நிலா மகன். வித்தியாசமான உணர்ச்சித் தருணங்கள் இவரது கைக்கு அகப்படுகின்றன. வாசித்துப் பாருங்கள்.
ரமேஷ் வைத்யா
எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைக் கலைஞர்
Be the first to rate this book.