பாவலர்மணி ஆ.பழநி அவர்கள், 'கானல் வரி' எனச் சிலம்பில் வரும் கருத்துச் சுரங்கத்திற்கு இந்நூலைக் கைவிளக்காகப் படைத்து ள்ளார். படிப்படியான விவாதப்போக்கில் அமைந்துள்ள இவ் ஆய்வுரை, இதுவரை புலனாகாதிருந்த பல உண்மைகளைப் புலப்படுத்த முயல்கிறது. வயந்தமாலையிடமும் கோவலன் கொள்ளத் தொடங்கிய வரம்புமீறிய காமமே கானல்வரிப் பாடல்களின் படிம உள்ளீடாக வெளிப்படுகிறது என்பதும், கோவலன் மாதவியிடம் திரும்பிவாராத பெரும் பிரிவுக்கு. கானல்வரி முடிந்ததும் பொழுதீங்குக் கழிந்து' எனக் கோவலன் கூறியபோது, மாதவி உடன் எழாமையே காரணம் என்பதும் தெளிவுற, மனங் கொள்ளுமாறு இதில் விளக்கப்பட்டுள்ளன; பிற பல துட்பமான கருத்துக்களும் இடம்பெறுகின்றன. பாவலர்மணி பழநி அவர்கள் ஆராய்ந்து புதுவதாகக் கூறவேண்டும் என்று வலிந்து எதையும் கூறவில்லை. இந்நூலைப் படிக்குங்கால் மேலும் மேலும் சிலப்பதிகாரத்தைக் கற்கவேண்டும் என்றும், இளங்கோவடிகளின் படைப்பாற்றலைக் கண்டுகண்டு மகிழ வேண்டுமென்றும், அவ்வாற்றால் தமிழனின் இலக்கிய நுகர்வும் ஆற்றலும் வளர வேண்டுமென்றும் விழைவேற்படுகிறது.
- தமிழண்ணல்
Be the first to rate this book.