*கோவலன் கண்ணகி" தொன்மம் தென்பகுதியில் வளர்ந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் நிலப்பரப்பில் கீழ்நோக்கி வளர்ந்தது. மிக வியப்புக்குரியதாய் அது கீழ்நோக்கி மட்டுமே வளர்ந்துள்ளது. மேல்நோக்கி அது வளரவில்லை. வடபகுதிக்குச் செல்லவில்லை. இதுவும் ஏனோ தெரியவில்லை. நாடகப் பேரரங்கில் முதன்மை நடிகனாய்ச் சிலப்பதிகாரம் நின்றுகொண்டிருக்கிறது. அது தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. வாசிப்பு என்பதே பேரரங்கினுள் நாடகத்தைப் பார்ப்பதுபோல்தான். சிலப்பதிகாரம் எல்லாத் துன்பவியல் இலக்கியமும்போல் மரணத்திலிருந்து எழவில்லை. அது மரணத்தை ஏற்படுத்திய ஒன்றிலிருந்து எழுகிறது. சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போதும் அது கேட்காமலேயே நம்மை அகப்படுத்திக்கொள்கிறது. நாம் அதற்குப் "பான்மையர்" ஆகின்றோம். ஒரு கணம் நம்மை வசப்படுத்தி அது நம்மையே அதனுள் கரைக்கிறது. அதனால் நம்முடைய சுயத்தை, நம் கவனத்தை அந்தக் கணம் மறைக்க வைத்துவிடுகிறது.
Be the first to rate this book.