சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் உடையது. அவற்றுள் மூன்றாம் காண்டமாக விளங்குவது வஞ்சிக் காண்டம். இது ஏழு காதைகளைக் கொண்டது. கண்ணகி திருச்செங்குன்றினில் இருந்தபோது வானில் இருந்து வந்த விமானம் ஒன்றில் அவளது கணவன் வந்து அவளை அழைத்துச் சென்றதை குறவர் குடியினர் கண்டது தொடங்கி, உலகோர் காண அற உரைகளைக் கூறுவதோடு இந்த இறுதிக் காண்டம் நிறைவுபெறுகிறது. இந்த அரிய நூலுக்கு. சங்க இலக்கியக் கலாநிதி முனைவர் முத்து. இராமமூர்த்தி அவர்கள் உரை எழுதியுள்ளார். இவரது உரையை எமது பதிப்பகம் வழி வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். இவரது புகார்க் காண்டம். மதுரைக் காண்டத்துக்கான உரைகளைத் தொடர்ந்து, சிலப்பதிகாரம் முற்றுப்பெறக்கூடிய மூன்றாம் காண்டமான வஞ்சிக் காண்ட உரை நூல் வெளி வருகிறது
Be the first to rate this book.