ஒரு திரைப்படத்திற்குரிய இசை, நடனம், திகிலூட்டும் காட்சிகள், துயரம் எல்லாம் நிறைந்த சிலப்பதிகாரத்தை தமிழின் முதல் திரைக்கதை என்று எவ்வித தயக்கமுமின்றி சொல்லலாம். இந்தத் திரைக்கதையின் நுணுக்கங்களை எல்லாம் ம.பொ.சி-யின் இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெளிப்படுத்தி சிலம்பில் நம்மை பிணைத்து வைக்கிறது.
சிலப்பதிகாரம் சர்வ சமய சமரசக் காப்பியம் என்று நிறுவுகிறார் ம.பொ.சி. தமிழிலக்கியம் காட்டும் முதல் பெண் துறவி கவுந்தி அடிகள் என்பது அவரது கூற்று.கண்ணகிக்கு ஆறிய கற்பு, சீறிய கற்பு என இரு முகங்கள் வெளிப்படுவதை அடியார்க்கு நல்லார் உரை வழி நின்று பேசுகிறார் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.
குன்றக் குரவையிலே முருகனை வழிபட வேண்டிய குரவர்கள் கண்ணகியை வழிபடுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய மாபெரும் திரைக்கதை வடிவிலான காவியத்தின் பாத்திரப் படைப்புகளின் நுண்மையையும் காவிய ரசனையையும் கற்று இன்புற ம.பொ.சி-யின் இந்தக் கட்டுரைகள் உதவும்.
- சந்தியா நடராஜன்
Be the first to rate this book.