அவன் யானையைக் கொல்லும்போது, என்னைக் கொல்லாதே. நான் உன் கனவு லட்சியம் நீ என்ன நம்பாமல் யார் நம்புவா? என்று சொன்னது அதுக்கு அந்தப் பையன், உன்னை யாரும் நம்பவும் இல்ல ஏத்துக்கவும் இல்லையே. உண்மையில இப்படி ஒன்னு இருக்காதுன்னு சொல்றாங்க, நான் என்ன செய்யறது? பெரும் கனவுகளுக்கு முன்னாடி உலகத்தில் மத்தவங்க இப்படிச் சொல்லாம இருந்ததே இல்ல. இப்படித்தான் சொல்லுவாங்க. நாமதான் சிகப்பு யானையக் காப்பாத்தணும். அப்படி காப்பாத்தினவங்கதான் தாமஸ் ஆல்வா எடிசன், லியோனர்டோ டாவின்ஸி, தாஸ்தாவஸ்கி இப்படி பலபேர். உன்னோட கனவை நீ காப்பாத்தாம, நீ எப்படி உயிர் வாழ முடியும்? உன்னோட கனவை நீ காப்பாத்தாம, யார் காப்பாத்துவா?
Be the first to rate this book.