ஸூஃபிகள் கனவுலகை அணுகும் முறை சராசரி மனிதர்களின் நிலையிலிருந்து வேறுபடுகிறது. கனவுலகம் என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமானது. ஏனெனில், அதில் ஆன்மா உடல் என்னும் சிறையைவிட்டும் நீங்கிய நிலையில் சுதந்திரமாக உள்ளது. “கனவுலகம் இந்த உலகத்தை விட அதிக நிஜமானது” என்கிறார் ஸூஃபி ஞானி இப்னு அறபீ. ஏனெனில், அவர் அந்த உலகத்தின் எதார்த்தங்களை உள்ளபடி விளங்கியிருக்கிறார். இந்த நிலையை அடைவதற்கு ஒருவர் சத்தியக் கனவுகள் காணும் நிலைக்குத் தன் அகத்தைத் தூய்மை செய்ய வேண்டும். அதற்கான பயிற்சிகளை ஸூஃபிகள் தருகின்றனர். அதில் ஈடுபட்டு முயலும் வாய்ப்பை வாசகர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக!
Be the first to rate this book.