காற்றில் அசைந்த காலவெளியில், அந்தியில் பூத்த நந்தியாவட்டையோடு வலம் வந்த என் கவித்தோழமை அ.சுந்தரசெல்வன், செய்யாற்றங்கரையின் செங்கதிராய்ச் சுடர்முகம் காட்டி எழுந்து வருகிறார். இது அநீதிக்கெதிரான பொதுமைத் தீயென்பதால் ஆரத்தழுவி ஆனந்திக்கிறேன் நானும் ஒவ்வொரு கவித்துளியும் பெருமழையென வாழ்த்துப் பூ தூவுகிறது. அசையும் என் மனக்கிளையில் அன்புத் தோழமைக்கான வாழ்த்துகளும் ஈரத்தூறலாய்ச் சொட்டுகின்றன. சொட். சொட். சொட்.
-மு. முருகேஷ் கவிஞர், எழுத்தாளர்
Be the first to rate this book.