சேயோன் என்ற பசுமை நிறைந்த நிலத்தின் மீது விழும் இருள்–பகையும் போரும், மலையின் ஒளிர்ந்த பாதைகள் முதல் இருண்ட பகுதிகள் வரை தலைமுறைகளால் காக்கப்பட்ட இரகசியங்களும் இதயத்தை ஈர்க்கும் மாயத் தோற்றக் காதலும் இங்கு ஒன்றாகக் சங்கமிக்கின்றன. “கதையின் முதன்மை மாந்தன் அதியன் எப்போதும் நீதி இருக்கும் பக்கத்தில் நிற்பவன்." அவனது பயணம் வெறும் போரின் வெற்றிக்காக அல்ல; உண்மையைத் தேடுவதற்கும், இயற்கை காப்பதற்கும், தன்னை அறிவதற்கும் ஆகும். இதில் போரின் யுக்திகள், காட்டின் அழகியல் மர்மம், தலைமைக் குணம், வஞ்சகரின் முகமூடி, காதல்-மாயை, அழிந்த விலங்குகள். கற்பனையான உயிரினங்கள் அனைத்தும் ஒரு புனைவுத் த்ரில்லர் ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நாவல், சங்க காலத்தின் இயற்கைச் சிந்தனையும் சங்க இலக்கிய நூல்களின் சில நிகழ்வுகளையும் மேற்கோள் குறிப்புகளையும் கலந்து நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்களுடன் புனையப்பட்ட கதை ஆகும். இந்தக் கதையைச் சுமந்து செல்லும் அதியனின் பயண பாதை, ஒரு வீரனின் பாதையைத் தாண்டி, வாசிக்கும் ஒவ்வொருவரின் பயணமாகவே இது தொடரும் என நம்புகிறேன். இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.
Be the first to rate this book.