பொருளாதார சிக்கலால் விளிம்பு நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு சிறிய குடும்ப நிறுவனம் எனும் இடத்திலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் மேலாண்மை நிறுவனமாகவும், இந்திய நாட்டின் ஆற்றல் மேலாண்மையில் பெரும் பங்களிப்பு செய்த நிறுவனமாகவும் கான்செர்வ் வளர்ந்து பெற்ற வெற்றி அசாதாரணமானது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றியே பெருநிறுவனங்களின் வெற்றிக் கதைகளாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான் கான்செர்வ் தனது உலகத்தரத்திலான வடிவமைப்பு, பொறியியல் திறன்கள், தயாரிப்புத் திறன்கள் ஆகியவற்றின் மூலம் தான் ஈட்டிய உறுதியான வணிக நற்பெயரையும், வாடிக்கையாளர் தம்மிடம் வைத்திருந்த மாறா நம்பிக்கையையும் வெளிப்படுத்தி தனித்து நின்றது.
"ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது ஒரு குடும்பத்தையே உருவாக்குவது போலத்தானே? நாம் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில்தானே குடும்பத்தில் செயல்படுகிறோம், நமக்கு மட்டுமாக இல்லையே... - இந்த வரிகள் தான் நாங்கள் கான்செர்வை எப்படி உருவாக்கினோம் என்பதைச் சொல்லும் பொருத்தமான வரிகள். ஒரு குடும்பத்தைப் போல."
-ஹேமா ஹட்டங்காடி
Be the first to rate this book.