இந்தியா என்ற ஒரு தேசம் உருவாகாத காலத்திலேயே வடக்கையும் தெற்கையும் இணைத்த பாலமாக விளங்கியதுதான் இந்த இராமேஸ்வரத்தைக் கொண்டுள்ள சேது நாட்டு பூமி என்பது நினைவுகூறுவதற்குரியது.
இந்த சேது நாட்டு மன்னர்கள் இதிகாச காவியமான இராமாயண காலத்திலிருந்தே இலக்கியங்கள் தொடர்புபடுத்திப் பேசி வருகின்றன. சேதுபதி மன்னர்களின் வம்சாவளியில் சிறப்பிக்கத்தக்க விருட்சம் போல வரலாறு குறிப்பிட்டிருப்பது கிழவன் சேதுபதி என்பதுவே வரலாற்று உண்மை. கருவறையிலேயே பகைமையைச் சூல் கொண்டவர் கிழவன் சேதுபதி. வாழ்நாள் முழுவதும் போர்க் களம் என்ற பகைமை நெருப்போடு காய்ந்து புகழப்பட்டவர் இவர். சேது சீமையை ஏறத்தாழ 32 ஆண்டுகள் திறம்பட ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதியின் மகோன்னத வாழ்வியலைத் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்நூல்.
நூலாசிரியரும் நாவலாசிரியருமான எழுத்தாளர் திரு. ஜெகாதா சேதுபூமியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால் சேதுபதி மன்னர்களின் வரலாற்றின் மீதான நுட்பமான பரிச்சயமான அவரது பார்வை இந்நூல் எங்கும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.
Be the first to rate this book.