டின் டின் யாருடனும் சேர்ந்து
விளையாடுவதில்லை. தனியாக விளையாடும்.
டின் டின்னின் அம்மா,
“எல்லாருடனும் சேர்ந்து விளையாடணும் டின்
டின்..” என்று சொன்னது.
மாட்டேன் போ.. தனியாகத் தான்
விளையாடுவேன்..” என்றது டின் டின்.
“சேர்ந்து விளையாண்டால் உனக்கு நண்பர்கள்
கிடைப்பார்கள்..” என்றது அம்மா.
“வேண்டாம்.. எனக்கு நண்பர்கள் வேண்டாம்..நான்
தனியாக இருப்பேன்..”
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.