காக்கும் கடவுள் கந்தனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளை ஆசை. கந்தனை பற்றி நாம் என்ன எழுத முடியும்? எழுதுகின்ற புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் அப்போதுதான் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க முடியும்.' என்று யோசித்தபோதுதான் இந்த நூல் பிறந்தது. ஆம் கந்தனை பற்றி ஆய்வு செய்து வரலாற்று ரீதியாக தகவல்கள் இடுவது ஆன்மீகமான நெஞ்சத்திற்கு அழகாகப் படவில்லை முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களின் பெருமைகளை பற்றி பேசினால் அது பெரும்பான்மை மக்களை சென்றடையும் என்று நினைத்த போது அது மனதிற்கு மிகவும் பிடித்த யோசனையாக இருந்தது அப்படி எழுந்த எண்ணத்தின் அடிப்படையில் இங்கே இருபது முருகன் கோயில்களில் வரலாறுகளை தொகுத்து வாழங்கி இருக்கிறேன். முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புபவர்களுக்கும், முருகனை தரிசிக்க விரும்புபவர்களுக்கும் இந்தபப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.