பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காற்றான வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பொது வெளியில் பெரிதும் அறியப்படாத செய்திகளை இந்நூல் சொல்கிறது. வீரபாண்டிய கட்ட பொம்முவின் மூத|தையர்கள் பெல்லாரி பகுதியிலிருந்து வந்து குடியேறிய செய்தியுடள ஆரம்பித்து ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு இறக்கும் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்நூல் பதிவு செய்துள்ளது!!
திருச்செந்தூர் கோயிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்த்தும் ஆவணித் திருவிழா ஒன்பதாம் நாள் திருவிழாவை மாற்றி ஏழாம் நாள் திருநாளாக நடத்த முயன்று அதன் காரணமாக தெய்வாதீனமாக ஏறப்பட்ட தடங்கல்கள் சுவாரசியமானவை.
பார்வையிழந்த வடநாட்டவர் ஒருவர் ஒரு கண்பார்வை திரும்பப் பெற்று அடுத்த கண்பார்வைக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த செயல், ஆவணி மாதம் ஒன்பதாம் நாள் திருநாளில் போர்க்களத்திலிருந்து கட்டபொம்மன் வரும் வரை செந்திலாதிபன் காத்திருந்த முறை பிரமிக்கத்தக்கன.
சுட்டபொம்மன் மரக்கறி உணவு மட்டுமே உட்கொள்பவர் என்பது புதிய செய்தி. 'வாய்க்கோடாரி' என்ற சிறப்பான ஆயுதம் வைத்திருந்த கட்டபொம்மனின் நண்பர் பற்றிய செய்திகள் ரசனையானவை.
Be the first to rate this book.