ஆர்.கே. லட்சுமணன், மால்குடி டேஸ் தொடரின் வழியே மால்குடி எனும் ஊரை ஊர் மக்களை அவ்வூரின் நிலம், மக்களின் மொழி கலாச்சாரம் உள்ளிட்ட அத்தனை விதமான சாயல்களையும் சித்திரமாக வடித்திருப்பார்.
அந்தக்கதைகளை நினைவுபடுத்திப் பார்க்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. செவக்காட்டு வட்டாரத்தில் உள்ள ‘ஆராய்ச்சிப்பட்டி’ சிற்றூர் அதன் மாந்தர்கள், ஊரின் வெவ்வேறுவிதமான சூழல்கள், அதில் வரும் கதாபாத்திரங்களின் தனித்தன்மை என இத்தொகுப்பில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் முகிலன் பாரதி.
அளவளவான கதைகள், அதிகம் கேள்விப்பட்டிராத பெயர்கள் கொண்ட கதா பாத்திரங்கள், தணிக்கைக்கு உட்படாத உரையாடல்கள், கிராமத்தின் முரட்டுப்பாசம், திடுமென நிகழும் சாவு. வெம்பரப்பான பூமியின் விசும்பல்கள், விகசிப்புகள், என கூட்டாஞ்சோறாய் மணக்கும்தொகுப்பு. வாழ்த்துகள்!
- ம. காமுத்துரை, தேனி
Be the first to rate this book.