அலெக்சாந்தர் குப்ரின் (18701938), 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யாவில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர்கள் குழுவைச் சேர்ந்த இவர், லேவ் தல்ஸ்தோய் மற்றும் அந்தோன் சேகவ் ஆகியோரின் சமகாலத்தவர். இந்நூல் 'ஒலேஸ்யா', 'காம்பிரீனுஸ்', 'எமரால்டு' ஆகிய பிரபலமான சிறுகதைகளையும், ஆசிரியர்க்குப் புகழை ஈட்டித்தந்த 'மலோஹ்' என்ற விளக்கக் கதையையும், 'செம்மணி வளையல்' என்ற குப்ரினின் மிகச் சிறப்பான இலக்கியப் படைப்பினையும் கொண்டிருக்கிறது.
"...காதல் ஆயிரக் கணக்கான அமிசங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றுமே தனது சொந்தச் சிறப்பினையும், தனது சொந்தத் துயரத்தையும், தனது சொந்த மகிழ்ச்சியையும், தனது சொந்த சுகந்தத்தையும் கொண்டிருக்கிறது. மிகவும் நறுமணமிக்கதும் துயரமானதுமான கதைகளில் ஒன்று குப்ரினின் 'செம்மணி வளையல்" என்று எழுதினார் பிரபல சோவியத் எழுத்தாளர் கன்ஸ்தந்தீன் பவுஸ் தோவ்ஸ்கி.
Be the first to rate this book.