உலகளவில் சுமார் 70க்கும் மேற்பட்ட குக்குறுவான் வகைகள் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கப் பகுதிகளில் 32 வகைகளும், ஆசியாவில் 25 வகைகளும் காணப்படுகின்றன. அமெரிக்கப் பகுதிகளில் காணப்படுபவைகள் ‘புதிய உலக’ (New World) குக்குறுவான்களாகக் கணிக்கப்படுகின்றன. டெளகான் என்ற பருத்த அலகு பறவையின்ன் நெருங்கி உறவினமாகக் குக்குறுவான்கள் கருதப்படுகின்றன. இங்கு பதினாறு வகைகள் காணப்படுகின்றன. இவை தவிர, தேன் உண்ணும் சில குக்குறுவான்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. தேன் உண்ணும் குக்குறுவான்கள் வெளிர் நிறங்களில் காணப்பட, மற்ற குக்குறுவான்கள் பளிச்சென்ற நிறங்களில் தென்படுகின்றன.
Be the first to rate this book.