டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதியுள்ள "சேக்கிழார் ஆராய்ச்சி நூல்" தமிழ்நாட்டு இளையோர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்ததொரு நூலாகும்.பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் பெருமான் தனது நூலைப் பெருங்காவியமாகவும், அதே நேரம் வரலாற்றியல் ஆய்வு முறைப்படி நாயன்மார்கள் வாழ்க்கையைத் தொகுத்த நூலாகவும் படைத்துள்ளார் என்பதை இந்நூலில் அறிஞர் இராசமாணிக்கனார் நிறுவுகிறார்.
சைவத்தில் தோய்ந்து நின்றாலும் சமணம் பௌத்தம் ஆகிய சமய நூல்களை பழுதறக் கற்றவர் சேக்கிழார் என்பதை வலுவான ஆதாரங்களோடு இந்நூலில் டாக்டர் மா.இராச மாணிக்கனார் எடுத்துரைக்கிறார்.சிறந்த ஆய்வு நூலான இந்நூலை மீண்டும் வெளிக்கொணர்தில் பன்மைவெளி வெளியீட்டகம் பெருமை கொள்கிறது.
Be the first to rate this book.