1. ரூமியின் வாழ்வில்: ஞானக் கதைகள் நூறு
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று.
2. ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி
இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது.
3. என்றார் ஸூஃபி
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.
“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி.
4. நீருக்குள் மூழ்கிய புத்தகம்
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்.
Be the first to rate this book.