தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்த அறம் சார்ந்த, அறிவு சார்ந்த வீழ்ச்சிதான் நூலாசிரியர் தோழர் குமரன்தாஸின் கவலை, "ஒவ்வொரு நாடும் தான் பெறுவதற்குத் தகுதியான பாசிசத்தையே " (Every country gets the fascism it deserves) என்பார் மறைந்த மார்க்சிய ஆய்வறிஞர் அய்ஜாஸ் அகமது. இக்கூற்று பார்ப்பன பாசிசத்துக்கு மட்டுமின்றி, அதன் விழுதாக இறங்கியிருக்கும் சீமானிய தமிழ்த்தேசியத்துக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக உருவாகி வளர்ந்திருக்கும் பார்ப்பனரல்லாதார் என்கிற அரசியல் ஓர்மையைச் சிதைக்கின்ற புறக்காரணிகளைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், இம்முயற்சியில் பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் ஒருயிர் மூவுடல்களாகச் செயல்படுவதையும், திமுக எதிர்ப்பு என்பது ஒருவகை சாதி ஆதிக்க மனநிலையிலிருந்து ஊற்றெடுக்கிறது என்பதையும் கவனப்படுத்துகிறார். அதிமுகவும் ஒரு திராவிட இயக்கமே என்று சாதித்துவரும் அறிவுத்துறையினரும் ஊடகவியலாளர்களும் இயக்கத்தினரும்தான் சிந்திக்க வேண்டும். இப்போதும் சிந்திக்க மறுப்பவர்கள் நடைமுறையில் பார்ப்பன பாசிசத்துக்குத்தான் வலுச்சேர்க்கிறார்கள்.
-தோழர் மருதையன்
Be the first to rate this book.