1905-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி ஜினோவா என்ற இடத்தில் பிறந்தான் மாஜினி, அன்று, இவன் இதாலியின் சுந்திரத்தைக் காணப் பிறந்தவன் என்று யாருக்குத் தெரியும்?
கருஞ்சட்டைப் படையை நிறுவி, இத்தாலிய இளைஞர்களின் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி, செயலுக்குத் தூண்டிய சிந்தனைக் கடல், இத்தாலியைக் காத்த இணையற்ற வீரன் என்று எல்லா நாட்டாராலும் புகழப்பட்டவன் மாஜினி. மாற்றாரின் கொடுமைகளைக் களைந்து, மக்களை மக்களாக வாழவைக்க எண்ணிய மாஜினி, கருஞ்சட்டை வீரன். தான் கொண்ட கவலையொழிந்த நன்னாளைக் கண்ட பிறகே இறக்க வேண்டுமென்று நினைத்த புரட்சி வேந்தன். 1872ம் ஆண்டு மார்ச்சு மாதம் 10-நாள் பைசா நகரத்தில் சாய்ந்த கோபுரச் சரிவின் சமாதியிலே விழிக்காத தூக்கத்திலாழ்ந்துவிட்டான் அவ்வீரன்.
குமுறி எழுந்த விடுதலை வேட்கையான் மாஜினி ஆற்றிய செயல்களும், முழக்கிய பேச்சொலியும், தீட்டிய கருத்துரைகளும், அந்தச் சாய்ந்த கோபுரச் சரிவில் மட்டுமன்று, அடிமைத் தளையை உடைத்தெறியத் துடிக்கும் மக்கள் இதயங்களிலெல்லாம் சங்கநாதம் புரிகின்றன.வாழ்க மாஜினியின் மாசற்ற தியாகத் தழும்புகள்!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.