சவரம் செய்து பிழைப்பு நடத்தும் நாவிதர்களின் வாழ்க்கையிலுள்ள வேதனைகளும், துயரங்களும் எப்போதுதான் முடிவுக்கு வரும்? மங்களகரமான சுபகாரியங்களுக்கு மேளம் வாசித்து ஜீவிக்கும் மேளக்காரர்களின் வாழ்க்கையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளும், முட்டுக்கட்டைகளும் எப்போது விலகும்?
மனிதனின் இதயத்திலிருந்து மனிதநேயம் எப்படி மறைந்து போகிறது - கருணையும் இரக்கமும் எப்படி காணாமல் போய், மனிதன் சக மனிதனிடமிருந்து எவ்வாறு தூரத்திற்குத் தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதெல்லாம் அறுதியிட்டு விவரிக்க முடியாதவை.
மொழி, இனம் கடந்து நாவிதர்களின் வாழ்வு ஒடுக்கப்பட்ட வாழ்வாக இருப்பதை, தெலுங்கு எழுத்தாளர் ஜில்லேள்ள பாலாஜி எழுதியுள்ள 9 கதைகளின் வழியாக உணர முடிகிறது. நாவிதர்களின் வாழ்வைப் பேசும் கதைகள் தனித் தொகுப்பாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை.தெலுங்கிலிருந்து தமிழுக்கு ருத்ர துளசிதாஸ் எனும் இளம்பாரதி மொழிபெயர்த்துள்ளார்.
Be the first to rate this book.