சத்யஜித் ரேயின் வாழ்வைப் பற்றியும் படைப்பைப் பற்றியும் பேசுகின்றது. ஷியாம் பெனகலின் இத்திரைப்படம். ரேயை நேர்காணல் செய்யும் வடிவில் அங்கங்கே ரேயின் படங்களிலிருந்து காட்சிகள் இடம்பெறுவதும் அவை தொடர்பான நினைவுகளுமாக விரிவு கொள்கிறது. சித்திரம். இசை, திரைக்கதை, இயக்கம், எழுத்து. குழந்தைகளுக்கான இதழ், துப்பறியும் கதைகள் என்று பன்முக ஈடுபாடு கொண்டு இயங்கிய ரே பரந்துபட்ட பார்வையாளர்களைச் சென்றடைவது எப்போது என்னும் கவலையை வெளிப்படுத்துகிறார். விபூதி பூஷன், தாகூர். சுனில் கங்கோபாத்தியாய், பிரேம்சந்த் என்னும் இலக்கியவாதிகளிடமிருந்து படைப்பாக்கப் பொறியைப் பெற்று வாழ்வெனும் மகாநதியின் போக்கினை தன் பார்வையாளர்களிடம் முன் வைத்துள்ள ஒரு மேதையாக ரே பிரம்மாண்டம் கொள்கிறார்.
Be the first to rate this book.